ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் அதிரடி நடவடிக்கை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 December 2023

ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் அதிரடி நடவடிக்கை.


அரிசி கடத்தல்காரர்கள் தினறல் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக ஆந்திரா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் தலைமையிலான குழுவினர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

இதில், அரக்கோணம் வழியாக சென்னை - திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்களில் வருவாய் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரயில் பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியிலும், கழிப்பறை பகுதியிலும் மூட்டைகளில் மறைத்து வைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. 


இதையடுத்து, 2 ரயில்களில் இருந்து 41 மூட்டைகள் கொண்ட 1 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து அரக்கோணம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் யாரென்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad