மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி பீடி பாக்கெட்டுகள்; மும்தாஜ் பீடி தொழிற்சாலை உரிமையாளர் போலீசில் புகார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 December 2023

மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி பீடி பாக்கெட்டுகள்; மும்தாஜ் பீடி தொழிற்சாலை உரிமையாளர் போலீசில் புகார்.


மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி பீடி பாக்கெட்டுகள் சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் வழக்கப்பட்டு இருப்பதால் நான்கு மாதத்தில் பத்து லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மும்தாஜ் பீடி தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சோளிங்கர் காவல் நிலையத்தில் மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு வழங்கியுள்ளார், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் காவல் நிலையத்தில் மும்தாஜ் பிடி தொழிற்சாலை உரிமையாளர் ஹுமாயூன் கபீர் புகார் மனுவினை வழங்கி உள்ளார், அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, மும்தாஜ் பீடி தொழிற்சாலையை கடந்த 80 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் வைத்து நடத்தி வருவதாகவும் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதாகவும் உற்பத்தி செய்யப்படும் மும்தாஜ் பீடி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஏஜென்ட்கள் மூலம் கடைகளுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் சமீப சில மாதங்களாக மும்தாஜ் பீடி என்ற பெயரில் போலி பீடி பாக்கெட்டுகள் மர்ம மோசடி நபர்களால் கடைகளில் வழங்கி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பாக சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக புகார்கள் வந்ததை தொடர்ந்து சோளிங்கர் பகுதியில் உள்ள வணிக கடைகளில் மும்தாஜ் பீடி தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் ஆகியோர் நேரடியாக சென்று சோதனை செய்து பார்த்தபோது செந்தூர் ஸ்டோர் என்ற கடையிலிருந்து  பல்வேறு சில்லறை வியாபார கடைகளுக்கு மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி பீடி பண்டல்கள் வழங்கப்பட்டு வருவது தெரிய வந்ததை தொடர்ந்து மும்தாஜ் பீடி தொழிற்சாலை உரிமையாளர்கள் சோளிங்கர் காவல் நிலையம் சென்று மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியான பீடி பண்டல்களை கடைகளில் வழங்கி வரும் மோசடி நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து புகார் மனுவை வழங்கி உள்ளனர்.


மேலும் கடந்த நன்கு மாதத்தில் இதுபோன்ற மோசடிகளால் சுமார் பத்து லட்ச ரூபாய் அளவிற்கு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர், மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மும்தாஜ் பி.டி.நிறுவனத்தின் மூலம் அனைத்து பகுதிகளிலும் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் மூலம் மும்தாஜ் பீடி விற்பனைக்காக பெற்று கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர், மேலும் மும்தாஜ் பீடி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியான பீடி பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாக கண்டறிந்தால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவலை தெரிவிக்கும்படி மும்தாஜ் பீடி தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad