ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு எஸ் பி அறிக்கை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 December 2023

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு எஸ் பி அறிக்கை.


ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றினை கண்காணிக்க காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும் குற்றங்களை தடுக்க நொடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (High Way Patrol)-5, நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் (Four Wheeler Patrol)-10, இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் (Two Wheeler Patrol)-55, மூலமாக கண்காணிக்கப்படும், புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், 2-க்கும் மேற்பட்ட நபர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் வாகன தணிக்கையில் (Vehicle Check Points) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


போக்குவரத்துகளை சீர் செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனி படையும், பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெறாவண்ணம் டீரோன்கள் (Drone) மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1 உதவி காவல் கண்காணிப்பாளர், 3 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள். 102 உதவி ஆப்வாளர்கள் உட்பட 657 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் இது சம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V. கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தெரிவிக்கையில் புத்தாண்டின், கொண்டாட்டம் (Celebration) என்ற பெயரில் குடி போதையில் வாகனம் ஓட்டுவது அதி வேகமாக வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வாகனம் ஓட்டுவது, 2-க்கும் மேற்பட்ட நபர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்வது போன்றவை விபத்துக்கு வழிவகுப்பதாகவும் எனவே இவ்வாறானவற்றை தவிர்த்து இளைஞர்கள் சந்தோஷமாக எவ்வித விபத்தும் இல்லாமல் இந்த புத்தாண்டினை கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள் மேலும் இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமால் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேற்கூறியவற்றை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad