தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் குழுமம் மூலமாக நடத்தப்படும் தமிழக காவல்துறை சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்கள் தேர்வு வருகிற 10-ஆம் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் ஆண் பெண் என இருபாலரும் தேர்வை எழுதுகிறார்கள்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரிரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கள் விஸ்வேஸ்ரய்யா, குமார், மற்றும் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு ஆகிய போலீசார் கொண்ட குழு கல்லூரியில் உள்ள மூன்று கட்டடங்களில் நடைபெறும் தேர்வு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தோடு தேர்வு நடைபெறும் இடத்திற்கு முன்னேற்றிருக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கல்லூரியில் ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 3 கட்டிடங்களில் சுமார் 2100 பேரும் மாவட்ட முழுவதும் மூன்று கல்லூரிகளில் சுமார் 4800 பேர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் மூலமாக நடத்தப்படும் தேர்வை ஆண் பெண் என இருபாலரும் எழுதுகின்றனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
.jpg)
No comments:
Post a Comment