கனமழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 114 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 December 2023

கனமழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 114 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி.


தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 நிவாரண மையத்தில் பகுதியில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 114 குடும்பங்களுக்கு தேவையான பாய் போர்வை தலையணை மற்றும் குழந்தைகளுக்கு பால் பவுடர் அரிசி வேட்டி சேலை உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை அமைச்சர் ஆர் காந்தி வழங்கினார்கள்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அமைச்சர் காந்தி நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றார். இதில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி ஒன்றிய குழுத்தலைவர் கலைகுமார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

No comments:

Post a Comment

Post Top Ad