ஆற்காடில் ஸ்ரீ ஜோதி லிங்கேஸ்வர் சிவனடியார் சேவா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பாக பௌர்ணமி முன்னிட்டு 2 மாத அன்னதான விழா !!! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 December 2023

ஆற்காடில் ஸ்ரீ ஜோதி லிங்கேஸ்வர் சிவனடியார் சேவா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பாக பௌர்ணமி முன்னிட்டு 2 மாத அன்னதான விழா !!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ ஜோதி லிங்கேஸ்வர் சிவனடியார் சேவா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பாக  பௌர்ணமி முன்னிட்டு இரண்டாம் மாத அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஜெய்மாருதி சரவணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கணேஷ் நாட்டு மருந்து கடை உரிமையாளரும், தொழிலதிபருமான கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார். 

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிவனடியார்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் திருவுருவத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அன்னதான நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில்  டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கடேசன், விஜயகுமார், ராஜி, ஜெயக்குமார், தரணி, சண்முகம், அருண், சாந்தி, முருகன், கலா, முருகன், பாலாஜி, ஞானவேல், சுந்தர், பிரபா, சந்தோஷ், பார்த்திபன், மணி, சுரேஷ், வெங்கடேசன், ஸ்ரீதர், அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் ரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.. 

No comments:

Post a Comment

Post Top Ad