ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் காலனி 14 ஆவது வார்டில் உள்ள பாலு அவருடைய மனைவி கௌரி மற்றும் அம்மா, குழந்தைகள் என ஐந்து பேர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் உள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து பேரூராட்சி தலைவர் பனப்பாக்கம், நகர செயலாளர். கவிதா சீனிவாசன் பாதிக்கப்பட்ட பாலு அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 10,000 நிதியுதவி வழங்கி, புதிய வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஆறுதல் தெரிவித்தார். 14 ஆவது வார்டு ஐ சேர்ந்த விசிக கவுன்சிலர். செந்தமிழ்செல்வன், முன்னாள் நகர அமைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment