ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா 21வது வார்டு ஒத்தவாடை தெருவில் வசிக்கின்ற நெசவுத் தொழில் செய்யும் கூலி தொழிலாளி இராதாகிருஷ்ணன்-வச்சலா தம்பதிகளின் ஓட்டு வீடு தொடர் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்தது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் ரூபாய் 10,000 நிதி உதவி, இரண்டு சிப்பம் அரிசி ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கி அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார், இதற்காக அந்த குடும்பத்தினர் அவருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் தந்து உதவுவதாக பாதிக்கப்பட்டவர்களிடம் கூறினார், இந்நிகழ்வில் உடன் வாலாஜா நகர செயலாளர் W.G.மோகன், 21 வது வார்டு வாலாஜாப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் MC, மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment