ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரன் சுருதி IPS அவர்கள் உத்தரவுப்படி, ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு அவர்கள் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையிலான தனிப்படை ஆற்காடு அன்பு டிவி சென்டர் அருகில் உள்ள திருமண தகவல் மையத்திடம் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் பையை பறிக்க எதிரிகள் முற்பட்டபோது சுதாரித்துக் கொண்டு எழுந்த நபரை பையைக் கொடு கொடுக்கவில்லை என்றால் ஒழித்து விடுவேன் என்று மிரட்டியும் அசிங்கமாக பேசியும் கை வளையம் மற்றும் கல்லால் தாக்கியும் சென்ற குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த எதிரிகளில் வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்த அழகு சுந்தரம் என்பவரின் மகன் அஜித்குமார் (27) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்சுருதி இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி இன்று 05.12.2023 ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இ.ஆ.ப அவர்கள் எதிரி அஜித் குமார் என்பவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment