சோளிங்கரில் நாடாளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட எம்பிகள் பதவி நீக்கம் செய்ததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

சோளிங்கரில் நாடாளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட எம்பிகள் பதவி நீக்கம் செய்ததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர் நகர செயலாளர் பாலு ஜெகதீசன் தலைமையில் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் ரத்தின நற்குமரன்.  மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் துரைநன்மாறன். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட எம்பிகளை பதவி நீக்கம் செய்த பாரதிய ஜனதா கட்சியை கண்டித்தும் அம்பேத்கர் எழுதிய சாசனத்தை மீறுகின்ற பிஜேபி அரசை கண்டித்தும் கண்டித்து உரையாற்றினார்கள்.


இதில் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் விடுதலை .ஷாம் கார்த்தி சிலம்பு ரகு சவுந்தர் ராம்கி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad