சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்றுவரும் ரூ. 5.08 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்றுவரும் ரூ. 5.08 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு.


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்றுவரும் ரூ. 5.08 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் இன்று சோளிங்கர் ஒன்றியம், ஆயல் ஊராட்சி நாகதாங்கல் கிராமத்தில் நிலம் இல்லாத 11 நபர்களுக்கு பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.


தொடர்ந்து, போளிப்பாக்கம் ஊராட்சி ஐயந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.15.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியினை பார்வையிட்டு கேட்டறிந்தார்கள்.


பின்னர், ஐயந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடி தமிழ் வாசிப்பு குறித்து சோதித்து பார்த்தார்கள். 4 மாணவ மாணவியர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி நன்றாக படிக்க வேண்டுமென அறிவுருத்தினார்கள்.


பின்னர், ஐயந்தாங்கல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் 100 நாள் வேலையில் ஈடுபட்டுள்ள பெண்கள் நீர் வரத்துக் கால்வாயில் நீர் உறிஞ்சி குளிகள் வெட்டி வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியாளர்கள் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டு, பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தார்கள்.


இதனைத் தொடர்ந்து, பழைய பாளையம் ஊராட்சி காலனி தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.15 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


பின்னர், மோட்டூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.20 இலட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பணிகள் சிறப்பாக உள்ளது. குளத்தின் கரையை சுற்றி மரக்கன்றுகள் நட கேட்டுக்கொண்டார்கள்.


தொடர்ந்து, குன்னத்தூர் ஊராட்சி அமராவதி பட்டணம் தச்சன்குளம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூபாய் 9.80 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்கள். பின்னர், மலையோர தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.9.63 இலட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணியினை பார்வையிட்டு கேட்டறிந்தார்கள்.


தொடர்ந்து, குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடப் பணியினையும், 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் மாணவியர் கழிவறை கட்டப்பட்டுள்ளதையும், குன்னத்தூர் காலனியில் ரூ.9.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நெற்களத்தினையும், நிலம் இல்லாத 3 நபர்களுக்கு தலா ரூ. 2.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூபாய் 30.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தினையும், குன்னத்தூர் காலனியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய கட்டடப் பணியில் பாலா ஓவியம் வரைந்துள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது. பல்வேறு தகவல்கள் மாணவ மாணவியர்களுக்கு அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது என ஓப்பந்ததாரரை பாராட்டினார்.


தொடர்ந்து, வைலாம்பாடி ஊராட்சியில் ரூபாய் 19.97இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி செயலாளர். பதிவேடு அறை, கூட்டரங்கம் அறைகளை பார்வையிட்டார்கள். மேலும் கழிப்பறைகளையும் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள். பின்னர், சின்ன வைலாம்பாடி முதல் மின்னல் வரையிலான 3.25 கி.மீ நீளத்திற்கு ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


தொடர்ந்து, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.38 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டடப் பணிகளையும், கங்கை மோட்டூர் பகுதியில் ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, அய்ப்பேடு ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தில் மோட்டூர் சாலை 1.12 கி.மீ நீளத்திற்கு ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ளதையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.30.38 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்... 

No comments:

Post a Comment

Post Top Ad