இந்த நிலை திமுகவின் ஆட்சியை அவல நிலையை காட்டுகிறது, கலவை அடுத்த முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காடு - செய்யாறு செல்லும் சாலை அருகே சதீஷ் என்பதற்கு சொந்தமான கட்டிடத்தில் அரசு மதுபான கடை இன்று திறக்கப்பட இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் மதுபான கடையை திறப்பதாக தகவல் அறிந்த மதுபான பிரியர்கள் மதுவினை வாங்குவதற்காக வருகை தந்ததால் அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது இதனை தொடர்ந்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு ஆற்காடு வட்டாட்சியர் மற்றும் கலவை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினர் கிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்
இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் சமரசம் அடைந்தது தொடர்ந்து மதுபான கடையை திறக்கக் கூடாது என தெரிவித்த பொதுமக்கள் மதுபான கடையின் முன்பு அமர்ந்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி மதுபான கடையை இப்பகுதியில் திறக்க கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் வார்டு உறுப்பினர்கள் உட்பட கிராம பொது மக்களின் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும் இந்த தீர்மானம் மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று மதுபான கடையை இப்பகுதியில் திறக்க விடாமல் நடவடிக்கை எடுக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

No comments:
Post a Comment