வாலாஜாபேட்டையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்பாள் ஸமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 December 2023

வாலாஜாபேட்டையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்பாள் ஸமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்பாள் ஸமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருகோவிலில் மார்கழி மாத ஆருத்திரா தரிசனம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று‌ அதிகாலை 3 மணி அளவில் உற்சவர் ஆனந்த நடராஜருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், கதம் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், விபூதி,  உள்ளிட்ட 50 வகையிலான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று நடராஜர் சுவாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை கொண்டு அலங்கரித்து சிவாச்சாரியார்கள் சோடா உபசாரங்கள் செய்து பல்வேறு மங்கள தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.


தொடர்ந்து சுவாமி ஆலயத்தில் இருந்து சிவமேளம் செண்டைமேளம் ,கேரளா மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட மேலதாளங்கள் முழங்க  ரதத்தில் கம்பீரமாக அமர்ந்தபடி பட்டாசு வெடித்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆருத்திரா தரிசன வழாவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நமசிவாய.. நமசிவாய.. நமசிவாய.. என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேர் ரதத்தை வடம் பிடித்து இழுத்து சென்று சுவாமியை வழிபட்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு. 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad