தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களின் அருகிலேயே இணைய வழி சேவைகளை பெறும் வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்படும் என அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 20.10.2022 அன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (14.12.2023) ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த இலவச இ-சேவை மையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்த இ-சேவை மையம் மூலம் முதல் பட்டதாரி சான்று, கலப்புத் திருமண சான்று, வருமான சான்று, வாரிசு சான்று, இருப்பிடச் சான்று, சிறு குரு விவசாயி சான்று, விதவைச் சான்று, குடும்பம் பெயர் அதற்கான சான்று கோரி விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களை பொதுமக்கள் இம்மையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களுக்கு சேவை கட்டணம் சராசரியாக ரூ.60/ செலுத்த வேண்டும்.
ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தில் பொதுமக்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல் இலவசமாக விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சேவைக் கட்டணம் முழுவதையும் தானே ஏற்றுக் கொள்கின்றேன் என கைத்தறி மற்றும் துணிநூ துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணியம், நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை,ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன், நகரமன்றத் துணைத் தலைவர்.ரமேஷ் கர்ணா, திஜிகே உலகப்பள்ளி மேலாண்மை இயக்குநர் வினோத் காந்தி மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment