மின் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமாரை இடமாற்றம் செய்ய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 December 2023

மின் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமாரை இடமாற்றம் செய்ய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் மனு.

ராணிப்பேட்டை மாவட்டம் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நுகர்வோர் நல உரிமை ராணிப்பேட்டை  கிழக்கு மாவட்ட செயலாளர் அலிம் அஹமத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில், வாலாஜாபேட்டை, மின்நுகர்வோரை அலைகழித்து இரத்த கண்ணீர் வரவழைக்கும் வாலாஜா மின் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமாரை பணிமாற்றம் செய்ய வேண்டும். வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சிக்குட்பட்ட அம்மூர் ரோடு, சாந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறேன், நுகர்வோர் நல உரிமை மாவட்டச் செயலாளராக  பொருப்பு வகித்து வருகின்றேன், தற்போது  வலாஜா பேட்டை மின்வாரிய உதவி  செயற்பொறியாளராக ரவிக்குமார் என்பவர் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.


இவரின் மேற்பார்வையில் வாலாஜாபேட்டை நகரம், கிராமியம், அம்மூர் பேருராட்சி, ஒழுகூர் கிராமம், போன்ற பகுதிகள் உள்ளன மேற்கண்ட  பகுதியிலுள்ள அனைத்து  மின் கர்வோறையும் அலை கழிக்க வைத்து  தற்காலிக மின் இணைப்பை  மாற்றி தருவதற்கும் மறுத்து வருகின்றார்  


மின்வாரிய ஊழியர்கள் தவறு  செய்கிறார்கள் வேலைக்கு ஏற்றார் போல  லஞ்சம் வாங்குகிறார்கள், மின் கசிவு, மின் இணைப்பு கம்பிகள், கம்பங்கள் சேதம் ஏற்பட்டு அபாய நிலையில் இருப்பதை தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து சரி செய்து தருவதில் தாமதிக்கின்றனர், இவர்களைப் பற்றி மேற்கண்ட மின் உதவி செயர்பொறியாளரிடம்   புகார் செய்தால் அவர்கள் மீது இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுப்பதில்லை, மேலும் அம்மூரில் மின் ஆய்வாளர் மின் நுகர்வோர் பாதிக்கப்படுமளவில் தவறு செய்து விட்டார் ஆய்வாளர் செய்த தவறுக்கு மாறாக மின் நுகர்வோரை அழைத்து  அவருக்கு 40 ஆயிரம் அபராதம் விதித்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்.


மின்உதவி செயற் பொறியாளர் ரவிக்குமாரல் இது போன்று பல நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் பெரும்பாலான மின் நுகர்வோர்களை  அலையவிட்டு வருகின்றார், ஆகவே இவறை பணிமாற்றம் செய்யும்படி மிகவும் பணி வன்புடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad