மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவில் சமூக நல்லிணக்க விருது மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 December 2023

மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவில் சமூக நல்லிணக்க விருது மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு வழங்கப்பட்டது.


ராணிபேட்டை மாவட்டம் திராவிட நட்புக் கழகம் சார்பில் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலைக்கல்லூரி வளாகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிட நட்புக் கழகம் ஆலோசகர்‌கள் மெளலவி நாசீர் உமரி வரவேற்புரையாற்றினார் மற்றும் மு.முகமது ஹசன் தொகுப்புரையாற்றினார். 

சி.அப்துல் ஹக்கிம் கல்விக் குழுமம் நிறுவனர் ஹாஜி.ஜியாவுதீன் சாஹிப், மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபின் ஜமாத் முத்தவல்லி ஹாஜி.பாக்தினி முஹம்மத் இர்பான் சாஹிப், வேலூர் மஸ்ஜித் அசோசியேஷன் தலைவர் ஹாஜி.அப்துல் ஹலீம், ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் தலைவர் ஹாஜி.அப்துல் வாஜித், திராவிட நட்புக் கழகத் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் சா.குமரன் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞரணி துணைச் செயலாளர் வே.ஜெகன்நாதன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 


திராவிட நட்புக் கழகத் தலைவர் ஆ.சிங்கராயர் தலைமை தாங்கினார். தமிழியக்கம் நிறுவனர். தலைவர் மற்றும் வேலூர் வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் கல்விக்கோ முனைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்கள் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய ஆட்சிப்பணி(ஓய்வு) திரு.சசிகாந்த் செந்தில் மற்றும் எழுத்தாளர் திரு. சூர்யா சேவியர் ஆகியோர்கள் கருத்துரையாற்றினார்கள். 


சிறப்பு விருந்தினராக திப்பு சுல்தான் குடும்ப அங்கத்தினர் மற்றும் தெஹரீக் குதாதத் தேசிய தலைவர் ஆலிஜனாப் மன்சூர் அலி திப்பு சாஹிப் அவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறந்த சமூக சேவைக்கான சமூக நல்லிணக்க விருது கல்விக்கோ முனைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்கள் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு வழங்கி பாராட்டி கௌரவித்தார். 


உடன் அசோசியேஷன் நிர்வாகிகள் இருந்தனர். இறுதியில் திராவிட நட்புக் கழகத் ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் ஏ.மன்சூர் பாஷா நன்றியுரையாற்றினார். அப்போது திராவிட நட்புக் கழகத் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad