ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வேலூர் வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் வழங்கினார் - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 December 2023

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வேலூர் வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் வழங்கினார்


ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள் அசோசியேஷன் தலைவர் கே‌.முஹம்மத் அயூப் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வேந்தர் அவர்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், இந்திய ஆட்சிப்பணி(ஓய்வு) திரு.சசிகாந்த் செந்தில் அவர்கள் மற்றும் திராவிட நட்புக் கழகத் தலைவர் ஆ.சிங்கராயர் அவர்களும் அலுவலகத்திற்கு வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். எங்களின் சமூக சேவைகளை பாராட்டி மேலும் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad