நெமிலி அருகே கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி மக்கள் தேசம் கட்சியினர் போராட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 December 2023

நெமிலி அருகே கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி மக்கள் தேசம் கட்சியினர் போராட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் சென்னை, பெங்களூர் விரைவு சாலைக்காக டி.பி ஜெயின் என்ற தனியார் நிறுவனம் சட்ட விரோதமாக 200 ஏக்கரில் ஆங்காங்கே பனப்பாக்கம், அகவலம், துறையூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் சிப்காட் அமைப்பதற்காக அரசு கையகப்படுத்திய பகுதிகளிலும் டி. பி ஜெயின் நிறுவனம் அரசுக்கும் இயற்கைக்கும் எதிராக மண் எடுத்து வருகிறது அரசாங்கம் அனுமதித்த சதுர அடியை விட இருமடங்கு அதிகமாக மணல் அள்ளுகிறார்கள். 

இதை கண்டித்து மக்கள் தேசம் கட்சியை சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பு செயலாளர். செல்வம், மாவட்ட இணை செயலாளர். இரா. மே. பசுபதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தலைமையில் டி.பி ஜெயின் நிறுவனத்திற்கு சொந்தமான ஜேசிபி வாகனங்களையும், மணல் ஏற்றி சென்ற லாரியையும் தடுத்து நிறுத்தி மணல் வாருவதற்கான அனுமதி ஆவணத்தை கேட்டு போராட்டம் நடத்தினர். இந்த தகவல் அறிந்து இது குறித்து மக்கள் தேசம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பு செயலாளர். செல்வம் அவர்களிடம் கேட்டபோது டி.பி ஜெயின் நிறுவனம் அரசு அனுமதித்ததை விட அதிக அளவில் மணல் அள்ளுகிறார்கள். இந்த கனிம வள கொள்ளை தொடர்ந்தால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உயிரிழப்பு  ஏற்படும் அபாயம் உள்ளது. 


இவை மேலும் மேலும் தொடர்ந்தால் அடுத்த கட்டமாக மக்கள் தேசம் கட்சியின் சார்பில் மக்கள் திரள் போராட்டத்தை அறிவிப்போம் என ராணிப்பட்டை மாவட்ட அமைப்பு செயலாளர். செல்வம் தெரிவித்தார். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad