குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் வாலாஜா நகர பாஜகவினர் கோரிக்கை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 29 December 2023

குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் வாலாஜா நகர பாஜகவினர் கோரிக்கை.

வாலாஜா திருத்தணி தெத்து தெருவை சேர்ந்தவர் வேதமுத்து. இவரது மனைவி பிரசாந்தினி. தம்பதிக்கு சாஷனி (10) என்ற மகளும், லக்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர். வேதமுத்து குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். லக்க்ஷன் சென்னையில் 2ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், தப்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டி ருப்பதால் வேதமுத்துவின் தாய் நிர்மலா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று பேர குழந்தைகளை 'அழைத்துக் கொண்டு வாலாஜாவிற்கு வந்தார். இந்நிலையில் சாஷனி மற்றும் லக்ஷன் இருவரும் பாட்டி வீட்டின் அருகே உள்ள பூண்டி சாமியார் குளத்தின் அருகே நேற்று விளையாடிக்கொண்டிருந்தான் இந்த நிலையில் தண்ணீர் பாட்டில் எதிர்பாராத  அருகே அருகே உள்ள  குளத்தில் விழுந்தது. 


அதனை  எடுக்க லக்ஷன் குளத்தில் இறங்கினர். அப்போது குளத்தின் படிக் கட்டில் பாசி படிந்திருந்ததால் லக்ஷன் கால் வழுக்கி தவறி நீரில் விழுந்து மூழ்கினார். இதனைக் கண்டதும் சாசினி கூசலித்தார் அவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு வந்து குளத்தில் குதித்து நீரில் மூழ்கி லக்ஷனை மீட்டு வராத அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும்  சோகத்தை  ஏற்படுத்தியது மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக  பாஜக கட்சியின் வாலாஜா நகர தலைவர் சரவணன் நகர மன்ற உறுப்பினர் என் டி சீனிவாசன்  ஐடிவிங் மாவட்ட செயலாளர்  சதீஷ்குமார் ஆகியோர் கருத்து தெரிவித்த போது பூண்டிசாமியார்குளம் கலைஞர் மேம்பாடு திட்டத்தின் கீழ் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்த பணியினை கரடி குப்பத்தைச்சேர்ந்த வெங்கடேசன் என்ற ஒப்பந்ததாரர் செய்து வருகிறார் நகராட்சி நிர்வாகம் கொடுத்த காலகெடுவை தாண்டி கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது கட்டுமான பணி சம்பந்தமாக கடந்த மூன்றாம்  மாதம் நகராட்சியில் புகார் கொடுத்து இருக்கிறோம் கட்டுமானப்பணி தரமாக இல்லை, பாதுகாப்பு இல்லை  முறைகேடு நடைபெற்று வருகிறது இது சம்பந்தமாக கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி ஆவல்நிலையை கண்டித்து செய்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டு காண்பித்திருக்கிறோம் உயிர் இழப்பு ஏற்பட்டால் தான் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுப்பினோம் அதே போன்று தான் ஏழு வயது சிறுவன் குளத்திலே மூழ்கி உயிரிழந்திருக்கிறான்.


இந்த உயிர் இழப்புக்கு நகராட்சி பணி மேற்பார்வையாளர் தமிழரசன், இன்ஜினியர் சண்முகம்,  ஒப்பததாரர் கரடிகுப்பம் வெங்கடேசன் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றனர் மேலும் சிறுவனை பறி கொடுத்த குடும்பத்தினருக்கு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்  ஒரு கோடி ரூபாய் இழப்பீடு  வழங்க வேண்டும், தாமதிக்கும்  பட்சத்தில் பாஜக கட்சியின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்படும் என்று கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad