ஆற்காடு நகர மின்சார வாரியத்தின் அலட்சியம்; ஆற்காடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அகற்றப்படாமல் இருக்கும் மின்கம்பம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 December 2023

ஆற்காடு நகர மின்சார வாரியத்தின் அலட்சியம்; ஆற்காடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அகற்றப்படாமல் இருக்கும் மின்கம்பம்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ராமகிருஷ்ணா பள்ளி சாலை கமல் ரெடிமேட்ஸ் அருகே உள்ள தெருவில் இரும்பு மின்கம்பம் அகற்றப்பட்டுள்ளது அந்த மின்கம்பம் சரியான முறையில் முழுமையாக அகற்றப்படாமல்  பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு  பாதிப்பு ஏற்படுத்தி  வருகிறது சாலையின் நடுவே சரியாக அகற்றப்படாமல் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஆற்காடு  மின்துறை அதிகாரிகளை ஆற்காடு நகர  பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிபதாகவும் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அந்த மின்கம்பத்தை அகற்றவும் கோரிக்கை விடுத்தனர் தாமதிக்கும் பட்சத்தில்  ஆற்காடு நகர மின் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad