இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெல்ல நகர்ந்து செல்கின்றன இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அவ்வப்போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்து சாலையை கடந்து செல்கின்றனர் தினமும் விபத்து ஏற்பட்டு வருகின்றது இதுகுறித்து சமூக ஆர்வலரும் பாஜக பிரமுகர்மான சதீஷ்குமார்,நகர செயலாளர் சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் அலிம் அகமது பேசுகையில் வாலாஜா அரசு மருத்துவமனை அருகே காய்கறி வியாபாரிகள் காய்கறி கழிவுகளை சாலையிலேயே கொட்டி வைக்கின்றனர்.
கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது நகராட்சி நிர்வாகம் தினமும் இந்த காய்கறி கழிவுகளை அகற்றுவது கிடையாது நோய்க்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மேலும் நோய் தொற்றுக்கு ஆளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் நலன் காக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காத்து வருவது ஏன்? நகராட்சி அதிகாரிகளுக்கு வருமானம் வந்தா போதும், காவல்துறை அதிகாரிகளுக்கு யார் விழுந்தால் என்ன எவன் செத்தா என்ன? கேசும், .......தான் அவர்களின் நோக்கம் என பொதுமக்கள் நலன் கருதி துறை சார்ந்த மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment