ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் மற்றும் மகேந்திரவாடி கிராமங்களில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் நெமிலி மத்திய (ம) மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி தலைமையில் 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், பொருளாளர். செல்வம், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். ராஜராஜன், வேட்டாங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். பொன். கோ. சங்கர், வேட்டாங்குளம் இளைஞர் அணி. பிரசாத் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment