இராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா மதிப்பிற்குரிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் மேம்பாட்டிற்கும் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக நினைவுப்பரிசு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவித்தார். அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் அவர்கள் நினைவுப்பரிசு பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் திரு.சரவண குமார் அவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment