அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வலியுறுத்தி ஆற்காடு 12வது திமுக கவுன்சிலர் நகராட்சி ஆணையாளரிடம் மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வலியுறுத்தி ஆற்காடு 12வது திமுக கவுன்சிலர் நகராட்சி ஆணையாளரிடம் மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு  12-வது வார்டு, தி.மு.க.நகரமன்ற உறுப்பினர் டி.லோகேஸ் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் மனு அளித்தார் அந்த மனுவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆற்காடு நகராட்சி 12வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி செய்து வருகிறேன்.

இரண்டு வருடங்களாக  வார்ட்டில் அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை வைத்து வருகிறேன். கம்சலா தனியார் மண்டபம் உரிமையாளர் அரசுக்கு சொந்தமான கழிவுநீர் வடிகால் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் அமைத்துள்ளார். கால்வாய் மண்டபத்திற்குள் இருப்பதால் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. 


இந்த அடைப்பினை சரிசெய்ய முடியவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி நோய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அரசு விதிமுறையின்படி மண்டபத்தில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. 


முறையான கழிவறைகள் இல்லை, மண்டபத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை திறந்தவெளியில் கொட்டி வைக்கின்றார்கள். மண்டபமே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தரவேண்டும். மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வரும் நபர்கள் மற்றும் அங்குள்ள சில நபர்கள் எதிரே உள்ள அரசு நிதி உதவி பெறும் சரஸ்வதி தனகோட்டி சிறுவர் பள்ளி கட்டிட வளாகத்தில் அமர்ந்து மதுமானம் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேவீசி செல்கின்றனர். குழந்தைகள் நலன் கருதி அங்கு கண்காணிப்பு கேமரா வைத்து இதுபோன்று தவறுசெய்யும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


12வது வார்டுக்குட்பட்ட வேதகிரி தெரு, எம்பெருமாள் செட்டித்தெரு, தியாகராஜன் தெரு, பழைய மண்டித்தெரு, கோவிந்தராஜ் தெரு, காலேபார் தெரு, இராமன் தெரு, ஒத்தவாடை தெரு, ஜெகந்நாதன் தெரு ஆகிய தெருக்களை நீலம் அகலம் அளவீடு செய்து கழிவு நீர் கால்வாய் கட்டி சிமெண்ட் சாலைஅமைத்து தரவேண்டும். 


குறிப்பாக எம்பெருமான் கோயில் தெரு, பழைய மண்டித்தெரு, வெங்கடாஜலபதிஜிதரு, ஒத்தவாடை தெருக்களில் கல்வெட்டுக்கள் அமைத்து தீர்வேண்டும் காலேபார் தெருவில் மழை காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மண் கொட்டி மேடாக்கி சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், அனைத்து தெருக்களிலும் புதிய மின் விளக்குகள் அமைத்து தரவேண்டும்.


12வது வார்ட்டில் தற்போது இயங்கி வரும் பழைய மின் மோட்டாரை மாற்றி புதிய மின் மோட்டார் அமைத்து தரவேண்டும். ஒவ்வொரு தெருக்களிலும் பெயர் பலகை வைக்க வேண்டும். ஒத்தவாடை தெருவில் அங்கன்வாடி மையம் கட்டிடம் மற்றும் சமையலறை சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து குழந்தைகள் மேல் விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அங்கன்வாடி பழைய கட்டிடத்தை அகற்றி, புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும்.


12வது வார்டு பொறுத்தவரை குரங்குகள், நாய்கள் தொல்லை அதிகரித்துவருகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  குரங்கு, நாய் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் தூய்மை பணி (Mass work) செய்து தரவேண்டும், வாலிபர்கள் உடற் பயிற்சி செய்வதற்கு ஜிம் / உடற் பயிற்சி கூடம் அமைத்து தரவேண்டும். 12வது வார்ட்டிற்குட்பட்ட காலியிட மைதானத்தில் நவீன பூங்கா அமைத்து தரவேண்டும். புதிய நியாயவிலைக்கடை கட்டித்தர வேண்டும்.


மேற்கண்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர பதவி யேற்றுக்கொண்ட நாளிலிருந்து ஒவ்வொரு நகரமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி வருகிறேன். நகரமன்ற கூட்டத்தில் குறைகளை கேட்டு தீர்மானம் போடுகிறார்களே தவிர, நடைமுறையில் ஒரு செயல்பாடுகூட இதுவரையில் இல்லை என்பதை மன வறுத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனவே கனம் ஐயா அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad