டிரான்ஸ்பாரம் காயில் கட்ட ஒரு பம்பு செட்டிற்கு ரூ.1,500/- வேண்டுமென கட்டாயப்படுத்தி வசூல் கிராம மக்கள் புகார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 January 2024

டிரான்ஸ்பாரம் காயில் கட்ட ஒரு பம்பு செட்டிற்கு ரூ.1,500/- வேண்டுமென கட்டாயப்படுத்தி வசூல் கிராம மக்கள் புகார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், அந்த மனுவில் நாங்கள் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறோம். விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட பம்பு செட்டுக்கள் உள்ளன. எங்களுக்கு மின் டிவிஷன் கலவை மின் பகிரமான கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு ஒரே டிராண்ஸ்பாரம் மட்டுமே உள்ளது. அதில் கிராம குடியிருப்பு பகுதிக்கும் விவசாய பம்பு செட்டிற்கும் மின் வினியோகம் செய்யப்படுகின்றது.

அடிக்கடி டிரான்ஸ்பாரம் எரிந்துவிடுகின்றது. கலவை மின் துறை அதிகாரிகளான (1)கோமலாJ.E., (2) முருகன்LI, (3) போர்மேன், (4) ஒயர்மேன் ஆகியோர் டிரான்ஸ்பாரம் காயில் கட்ட ஒரு பம்பு செட்டிற்கு ரூ.1,500/- வேண்டுமென கட்டாயப்படுத்தி வாங்குகின்றார்கள். காசு கொடுக்க தாமத்திக்கும்போது வேண்டுமென்றே காலதாதம் செய்து மின் இணைப்பு கொடுக்கின்றனர்.


மின் இணைப்பு கொடுக்க வந்தால், மது பாட்டில், பிரியாணி, வேலை செய்ய கூலி கேட்கின்றனர். சென்ற வருடம் டிரான்பரம் மாற்றி அமைக்க J.E, தலைமையில் எங்களிடம் ரூ. 30,000/- வாங்கினார்கள். டிரான்ஸ்பாரம் ஏற்றி இறக்க தனி கூலி கேட்கின்றனர். தற்போது டிரான்ஸ்பாரம் காயில் பழுதாகி 15 நாட்கள் ஆகியும் இதுநாள் வரையில் புதிய டிரான்ஸ்பாரம் அமைக்கவில்லை. 


மின் சப்ளை போதவில்லை. மின்சப்ளை கொடுக்க புதிய டிரான்பாரம் வைக்க ரூ.15,000/ கேட்கிறார்கள். டிரான்ஸ்பாரம் கம்பங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது டிரான்ஸ்பாரம் சப்ளை பற்றாக்குறையாக உள்ளது. விவசாய நிலங்களிலுள்ள பயிர்கள் தண்ணீரில் இல்லாமல் காய்ந்து வருகின்றது. ஒருபக்கம்  விவசாய நிலங்களுக்கும், மறுபக்கம் பொதுமக்களும் பாதித்து வருகின்றனர்  


விவசாய நிலங்களுக்கு மின்சாரத்தை ஒன்றுவிட்டு ஒருநாள் கொடுக்கிறார்கள். இதனால் பயிர்களுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. பயிர்கள் நாசமாகின்றன. எனவே குடியிருப்பு பகுதிக்கு தனி டிரான்ஸ்பாரம், விவாய நிலங்களுக்கு தனி டிரான்ஸ்பாரம் உடனடியாக அமைத்து தந்து இந்த ஏழை மக்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் பொதுமக்கள் பேசிய போது எல்ஐ முருகன் டிரான்ஸ்பார்ம் ஏற்றி வந்து பொருத்தும் போது அவர் விரும்பும் பிராண்டேட்  மது பாட்டில்கள் மற்றும் பிரியாணி வாங்கி வந்து கொடுத்தால் தான் வேலை செய்கிறார் டிரான்ஸ்பார்ம் ஏற்றி வரும் வாகனத்திற்கு வாடகை ஏற்றி இறக்கும் மின் ஊழியர்களுக்கு போர் மேன்களுக்கு கணிசமான தொகை கேட்டு வாங்கிக் கொள்கின்றனர்


அவர்கள் கேட்கும் பணத்தில் குறைவாக கொடுத்தால் வேலைகளில் குறைபாடு வைத்து செல்கின்றனர் ஜே இ கோமளா பேசும்போது பம்பு செட்டுகளுக்கு பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணமா செலுத்துகிறீர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் சொல்லும் பணத்தை கொடுத்து விட்டு ட்ரான்ஸ்பார்ம் ஏற்றுக்கொண்டு போங்கள் பணம் இல்லை என்றால் எப்படி வேலை நடக்கும், பணம் வசூல் பண்ணி எல்ஐயிடம் கொடுத்து அனுப்பி விடுங்கள்  என்கிறார் என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad