வாலாஜா காவல் நிலையத்தில் 3.5 லட்சம் மதிப்புள்ள திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த ஆய்வாளர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 January 2024

வாலாஜா காவல் நிலையத்தில் 3.5 லட்சம் மதிப்புள்ள திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த ஆய்வாளர்.


ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்கள் மேற்பார்வையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, ராணிப்பேட்டை, மற்றும் வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  கடந்த 3 மாதங்களில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தரக்கோரி  பொதுமக்கள் வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சைபர் கிரைம் உதவியுடன் சுமார் 3.5 லட்சம் மதிப்புள்ள 15 செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு வாலாஜா காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையில் உதவி ஆய்வாளர் மகாராஜன் முன்னிலையில் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் போது உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், சீனிவாசன், தனிப்பிரிவு காவலர் ராஜேந்திரன், காவல் நிலைய எழுத்தாளர்  செல்வராஜ், மற்றும் காவலர்கள் சம்பத், ராஜ் கமல் ஆகியோர் இருந்தனர்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad