சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்தவருக்கு 3 சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர் காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 29 January 2024

சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்தவருக்கு 3 சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர் காந்தி.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள பஞ்சுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோபி (55) இவர் தனியாக கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இரண்டு கால்களும் அகற்றப்பட்டது.


இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள்  வாலாஜாபேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் ஆர் காந்தியிடம் இரண்டு கால் இழந்த நபர் எனக்கு இரண்டு சக்கர வாகனம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து இரண்டே நாட்களில் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத்திறனாளி பயணம் செய்யும் இரண்டு சக்கர வாகனத்தை இன்று வருகை தந்து அவரிடம் வாகனத்தின் சாவியை வழங்கினார்.


இந்த நிகழ்வில் வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷாவெங்கட், நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை துணைத்தலைவர் கமல்ராகவன், நகர செயலாளர் து.தில்லை,  நகர மன்ற உறுப்பினர்கள் இர்ஃபான், ரவிச்சந்திரன், பிருந்தா சிலம்பரசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad