மோசூர் கிராமத்தில் அரசின் மூலம் மரங்கள் நட்டு காடு உருவாக்க மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 29 January 2024

மோசூர் கிராமத்தில் அரசின் மூலம் மரங்கள் நட்டு காடு உருவாக்க மனு.


திமிரி ஒன்றியம் மோசூர் கிராமத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நில ஒப்படை செய்யும் திட்டத்தின் மூலம் சுமார் 250 ஏக்கர் நிலம் ஒப்படை செய்தனர். இந்த நிலத்தை அரசு விதிமுறைகளை மீறி சுமார் 25 நபர்கள், 50 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிட்டனர். இந்த விற்பனையை ரத்து செய்து அரசின் மூலம் மரங்கள் நட்டு காடு உருவாக்க மனு செய்யப்பட்டது.

இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, சட்டமன்ற சபை கூட்டம், ஜமாபந்தியில் மனு போன்ற பல்வேறு மனுக்கள் குழு, கிராம கொடுத்துள்ளோம் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம் தடையில்லா சான்று பெற்று பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது. 


பத்திரபதிவிற்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீதும், நடவடிக்கை  எடுக்காத அரசு ஊழியர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தீர விசாரணை செய்து விற்பனை செய்த நிலத்தை அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் (ம) பத்து ரூபாய் இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444 

No comments:

Post a Comment

Post Top Ad