பள்ளி மாணவர்களின் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 January 2024

பள்ளி மாணவர்களின் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை.


மேல்விஷாரம்‌ தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் தின மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மேல்விஷாரம் கத்தியவாடி கூட்ரோடு வழியாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலினால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்லமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 

எனவே காலை 8.30 மணி முதல் 9.30 மணிவரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை கத்தியவாடி கூட்ரோடு வழியாக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்களிடம் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad