புதியதாக துவக்கப்பட்டுள்ள 4.0 தொழில் மையத்தில் நவீன இயந்திரங்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 January 2024

புதியதாக துவக்கப்பட்டுள்ள 4.0 தொழில் மையத்தில் நவீன இயந்திரங்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு.


அரக்கோணத்தில் தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழில் பயிற்சி மையத்தில் நவீன இயந்திரங்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை மாணவர்களுடன் அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு.

தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 4.0 தொழில் மையத்தில் நவீன இயந்திரங்கள் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செயல்முறை பயிற்சிகளை மாணவர்களுடன் அமர்ந்து பார்வையிட்டு கேட்டறிந்தார்கள். உடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி., இ.ஆ.ப., திறன் மேம்பாட்டு கழக கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர்  பாபு, தொழில் மேலாண்மைக் குழுத் தலைவர் ஹரிதாஸ், ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சௌந்தர், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சித்ரா மற்றும் பலர் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad