நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 75 வது குடியரசு தின விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 January 2024

நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 75 வது குடியரசு தின விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 75 வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ஏ. வசந்தி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி. சிவரஞ்சனி, துணைத் தலைவர். ரசியா பானு, கல்வியாளர்கள். ராஜமாணிக்கம், கந்தசாமி, வார்டு உறுப்பினர். தனசேகர், ஆசிரியைகள். கஸ்தூரி, அமுதா, தற்காலிக ஆசிரியைகள். ஜெயா பபிதா ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நடனம் பாடல், கவிதை, பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாணவர்களுக்கு பரிசு பொருள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டுப் பன்னுடன் விழா நிறைவு பெற்றது.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad