அரக்கோணம் அருகே தனி பஞ்சாயத்து கேட்டு காவனூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

அரக்கோணம் அருகே தனி பஞ்சாயத்து கேட்டு காவனூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூர் பஞ்சாயத்துக்கு  உட்பட்ட காவனூர், நரசிங்கபுரம், காவனூர் காலனி, சில்வர் பேட்டை, ஷா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.  இங்கு 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இதில் காவனூர் காலனி பகுதியில் இரண்டாயிரத்து ஐநூறுக்கும்  மேற்பட்ட மக்கள் உள்ளனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதிகளை விரைந்து செய்து தருவதில்லை. எங்கள் பகுதிக்கு என்று அரசு பள்ளி , ரேஷன் கடை,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 100 நாள் வேலை திட்டம் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்குவதில்லை. 


எங்கள் பகுதியை வேண்டுமென்றே காவனூர் பஞ்சாயத்து நிர்வாகம்  புறக்கணித்து வருகின்றனது. எனவே காவனூர் காலனி , ஷாநகர், சில்வர்பேட்டை, அண்ணாநகர்  ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தனி பஞ்சாயத்து நிர்வாகத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காவனூர் காலனி பஸ் ஸ்டாண்டில் 200- க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் சாலையில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதனால் அரக்கோணத்தில் இருந்து காவனூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகினர். 


தகவல் அறிந்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர். பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad