குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் வழங்கினார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 January 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் வழங்கினார்.


இராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் கற்பகம்   நியாய விலைக்கடையில் தை திருநாளை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ரூ.1000/- பொங்கல் பரிசுடன் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலையை அட்டைதாரர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசிய போது, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி மக்களுக்கான மக்களாட்சி,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாகுபாடு இன்றி 1000/-ரூபாய்  வழங்கப்பட்டு வருகிறது மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்  மக்களின் வரிப்பணம்  வீணாகாமல் சரியாக  மக்கள் பயன்பெறும்   வகையில்  திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.


தற்போது போக்குவரத்து பணியாளர்கள்  டி ஏ கொடுக்கப்படவில்லை என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  முன்னாள் இருந்த ஆட்சியாளர் தொழிலாளர்களுக்கு கோரிக்கை நிறைவேற்றித் தர வேண்டும் என்கிறார்   கடந்த பத்து வருட ஆட்சியில் இருந்தது நீங்கள் ஏன் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.


மொத்தமாக கடனை வைத்து சென்று விட்டீர்கள் கடனை அடைத்து வருவதற்கு பெரும்பாடாய் இருக்கிறது  ஆனாலும்  என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை பேச வேண்டும் குடும்பம் நலம் பெற்றால் தான் இந்த நாடே நலமாக இருக்கும் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று மருத்துவம் பார்க்க  நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும்  அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்   அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து  தெரிவித்தார்.


இந்த நிகழ்வும் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகுமார். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, வார்டு உறுப்பினர்கள் வினோத்,குமார், அதுல்லா, துணைப்பதிவாளர் சந்திரன். பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad