ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இஆப., அவர்கள் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 January 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இஆப., அவர்கள் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட இருளர் இன மக்களுக்கு சுய தொழில் தொடங்க வங்கியாளர்கள் அதிகளவிலான கடனுதவிகளை வழங்கிட முன்வர வேண்டும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது... தமிழ்நாடு அரசின் சார்பாக மக்களுக்கு எண்ணற்ற மான்யத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பெற்று மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட தொழில்மையம், வாழ்ந்துகாட்டுவோம், தாட்கோ, நபார்டு, முன்னோடிவங்கி உள்ளிட்ட துறைகள் மூலமாக விவசாயிகளுக்கான கடன், இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் கடன், மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான தொழிற்கடன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கான கடனுதவி, கைத்தறி நெசவாளர்களுக்கான முத்ராகடன் உள்ளிட்ட கடனுதவி திட்டங்கள் அரசின் சார்பில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.


அனைத்து வங்கியாளர்களும், இத்திட்டங்களின் கீழ் தங்களது வங்கியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் போது பொதுமக்களை அலை கழிக்காமல் விரைந்து விண்ணப்பங்களை ஆராய்ந்து கடனுதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட இருளர் இனமக்களுக்கு சுய தொழில் தொடங்க வங்கியாளர்கள் அதிகளவிலான கடனுதவிகளை வழங்கிட முன்வர வேண்டும் பிரதம மந்திரியின் ஜென்மன் திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியின் மூலம் அளிக்கப்படும் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு பயன்பெறும் வகையில் சுயத்தொழில் வேலை வாய்ப்பு பயிற்சிகளை நடத்திட வேண்டுமென அறிவுருத்தினார்கள் வாழந்து காட்டுவோம், தாட்கோ உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கடனுதவி கோரி விண்ணப்பித்து தற்பொழுது வரையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது அந்தந்த வங்கியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பயனாளிகளுக்கும் உதவிட ஏதுவாக ரூ.70 ஆயிரம் வரை கடன் உதவி வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி,இஆப., அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் திட்ட வெ.லோகநாயகி, இயக்குநர் முகமை நபார்டு பொது மேலாளர் அருண்விஜய், மண்டல ஊரக வளர்ச்சி பிரச்சன்ன குமார், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜிகுமார், மகளிர் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் .சரண்யா மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad