சென்னை உயர் நீதிமன்றம் சாத்தூர் ஊராட்சிக்கு ஆணை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 January 2024

சென்னை உயர் நீதிமன்றம் சாத்தூர் ஊராட்சிக்கு ஆணை.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தில்   சாத்தூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது, 9 வார்டுகள் அடங்கிய இந்த ஊராட்சியில்   கடந்த 2021 இல் நடந்த  உள்ளாட்சித் தேர்தலில் சாமா.சேட்டு என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், துணைத் தலைவராக கே.கேளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆரம்ப முதலே  துணைத் தலைவர் இளங்கோவன்  பி எஃப் எம் எஸ், சில் கையெழுத்து போடாமல் தகராறு செய்து வந்துள்ளார்  சாதி இந்துக்கள் வாழும் சாத்தூர்  பகுதியில் உள்ள  வேலைகளை நான் மட்டுமே செய்ய வேண்டும் நீங்கள் வரக்கூடாது என்றெல்லாம் பேசியதின் காரணமாக  இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது   இதன் காரணமாக ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால்  8 லட்சம் ரூபாய் எடுக்க முடியாமல்  பஞ்சாயத்தில் நிலுவையில் உள்ளது மன உளைச்சலான  ஊராட்சி மன்ற தலைவர் சாமா.சேட்டு துணைத்தலைவர் இளங்கோவின் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட   ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், உதவி இயக்குனர், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் போன்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவ்வப்போது மனு கொடுத்தும்  தீர்வு செய்யும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  மன உளைச்சல் ஏற்பட்டு  கடந்த 9.11.2023 அன்று  சென்னை உயர் நீதிமன்றத்தில்  ரெட் மனு தாக்கல் செய்துள்ளார் .


இந்த மனுவை ஏற்றுக் ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் சாத்தூர் ஊராட்சி துணை  தலைவருக்கு பதிலாக  அரசு அலுவலர் ஒருவரை நியமனம் செய்து நிலுவைத் தொகை வழங்கி ஊராட்சி நிர்வாகம் செயல்பட   சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி    வி.லட்சுமண நாராயணன்  கடந்த  28. 12.2023 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad