அரக்கோணத்தில் எம். ஜி. ஆர் பிறந்தநாள் விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 17 January 2024

அரக்கோணத்தில் எம். ஜி. ஆர் பிறந்தநாள் விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில்பாடியில் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான. எம். ஜி. ஆர். அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது திருவுருவ படத்திற்கு எம்.எல்.ஏ  சு.ரவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் -ன் பிறந்தநாள் நெமிலி ஒன்றியம் அரிகில்பாடி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் ஏ. ஜி. விஜயன் தலமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய மாணவர் அணி செயலாளர். வழக்கறிஞர் ஆர். பிரகதீஸ்வரன், ஜெ பேரவை செயலாளர். சங்கர், மாவட்ட பாசறை செயலாளர். அன்பரசு, ஐடி பிரிவு செயலாளர். புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் எம். எல். ஏ சு. ரவி அலங்கரிக்கப்பட்ட எம். ஜி. ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர். வள்ளி, விவசாய அணி. ஸ்ரீதர், மாவட்ட பாசறை துணை செலாளர் ஜி. அரிதாஸ், மாவட்ட மாணவர் அணி. நரேஷ் காந்த் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad