தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 January 2024

தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக மாணவரணி சார்பில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.சி.விஜய் ஆனந்தன் தலைமை தாங்கினார், வாலாஜா நகரக் கழகச் செயலாளர் டபுள்.யு.ஜி மோகன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் டபுள்யு.எஸ். வேதகிரி, மாவட்ட மாணவர் அணி தலைவர் ஜிம் எம். பிரபு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர் பூங்காவனம், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் பூண்டி  பிரகாஷ், ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி சந்தோசம் உள்ளிட்ட  பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் 


வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்ப துரை, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார், கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா, கழக மாணவர் அணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.சந்திரசேகரன் மாநில அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பெல் ஆர். தமிழரசன் முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளர் கோவி. எஸ். மோகனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை பேசுகையில்  இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்து இந்த பொதுக்கூட்டம்  நடைபெறுகிறது, ஹிந்தி என்பது அமில மழை, விட்டு விட்டு பெய்கிற விஷ மழை, தொழுதாலும் விடாது துயர மழை என்றான் கவிஞன்,  பேரறிஞர் அண்ணா சொன்னார் ஹிந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை ஹிந்தி திணிப்பை  தான் எதிர்க்கிறோம் என்றார்.


அண்ணா பாராளுமன்றத்தில் இருக்கும்போது  ஒருவர் அண்ணாவிடம்  பேசினார் பெரும்பான்மையாக இருக்கிறவர்கள் தான் ஆட்சிக்கு வருகிறார்கள் என்கிறீர்கள் தமிழ், தெலுங்கு பிற மொழிகளை பேசுகிறவர்களை விட ஹிந்தி பேசுகிறவர்கள் தான் அதிகம் அதனால் பெரும்பான்மையாக இருக்கிற மக்கள் பேசுகின்ற  ஹிந்தி மொழியை ஏன் பிற மாநிலங்களில் பேசக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய போது அண்ணா எழுந்து நின்று இந்தியாவின் தேசிய பறவை மயில் ஆனால் இந்தியாவில் அதிக எண்ணிக்கை உள்ள பறவையாக காக்கை தான் இருக்கிறது காக்கை பெரும்பான்மையாக இருக்கிறது என்பதால் எப்படி காக்கையை தேசிய பறவையாக வைத்துக் கொள்ள முடியும் என்று அண்ணா சொன்னார்.


மொழிப்போர் தியாகிகளுக்கு கூட்டம் போடுவதற்கு அதிமுகவுக்கு மட்டும்தான் அருகதை இருக்கிறது தமிழுக்காக திமுக என்ன செய்தது  தமிழ் மொழி வளர்ச்சிக்காக புரட்சித்தலைவர்   எம்ஜிஆர் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தார், அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட  அரசு ஆணையை கொண்டு வந்தார், உயர் நீதிமன்றத்தில் தமிழ் இல்லை, ஆனால்  முனிசிப் கோர்ட்டில்  நீதிமன்றத்தில் பாமர மக்களும் வழக்கின் தன்மை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழைக் கொண்டுவந்தவர், புரட்சித்தலைவி அம்மா தஞ்சையில் தமிழ் மொழி மாநாடு நடத்தினார் ஜவஹால்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று  இருக்கையை ஏற்படுத்தினார் தமிழ் இருக்கைகாக எடப்பாடி யார் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரு மாத சம்பளத்தை வழங்க செய்தார் என்றார்   திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ரிப்போர்ட்டர் ஒருவரை தாக்கியதை முதல்வர் குறிப்பிடும் போது  சிறப்பு நிகழ்வுக்காக  நிவாரணத் தொகை வழங்கியதாக கூறினார் 


தற்போது திமுக செய்து இருக்கிற ஒரே சாதனை நடிகர் நிவேதா பெத்துராஜ் என்பவரை சேம்பியனாக மாற்றி இருக்கிறார்கள் மருத்துவமனை அருகே கார் ரேஸ் நடத்துகிறார்கள் தமிழ்நாட்டில் இல்லாதவர்களுக்குதான் ஆயிரம் ரூபாய் பரிசு என்பதைப் போல அனைவருக்கும் சமமாக வாழ முடியாது என்ற போது அதிமுக சார்பில் வழக்கு போட்டதில் விளைவாக அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது  42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்தப் பணம்  எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பி பல்வேறு கருத்துகளை பேசினார். 


இக்கூட்டத்தில் அதிமுக கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வாலாஜா நகர இளைஞரணி செயலாளர் டான் மேத்தா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad