நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 January 2024

நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர். ஏ. வசந்தி தலைமையில் தீண்டாமை உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/ குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். 

தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்று எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். 


இந்திய அரசியலைமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். இதில் ஆசிரியைகள். கஸ்தூரி, ஜெயா மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad