வாலாஜாவில் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துமனை (ம) இயற்கை மருத்துவம் இணைந்து இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

வாலாஜாவில் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துமனை (ம) இயற்கை மருத்துவம் இணைந்து இலவச மருத்துவ முகாம்.


ராணிப்பேட்டை மாவட்டம் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துமனை (ம) இயற்கை மருத்துவம் இணைந்து இலவச மருத்துவ முகாம் வாலாஜாவில் உள்ள  தனியார் மாஸ் மண்டபத்தில்  நடத்தினர்.

 

நுகர்வோர்கள் நலத்துறை  ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் S.அலிம் அஹமது தலைமை தாங்கினார் சமூக உரிமை பாதுகாப்பு படை மாநில செயலாளர்  A.p.சுரேஷ் முன்னிலை வகித்தார், வாலாஜா டவுன் ஜமாத் தலைவரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மனுமான DR.S.அக்பர் ஷெரிப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.


வாலாஜா அரசு  மருத்துவமனை  மருத்துவர்  சசிரேகா இயற்கை மருத்துவம் குறித்து விளக்கம் அளித்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார், சட்ட உரிமைகள்ரி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் பொறுப்பாளர்கள் மனித உரிமை மாவட்ட செயலாளர் சசிகுமார் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாவட்ட செயலாளர் ரவிவானன் சமூக நல உரிமை மாவட்ட செயலாளர் ஆர் நாகராஜன் மற்றும் நுகர்வோர் நலப் பிரிவு மாவட்டச் செயலாளர் ஏ வேலு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் உதயகுமார் அவர்களும் உறுப்பினர்கள் ஏ இம்ரான் ஏஇர்ஃபான்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட சமூக உரிமை மாவட்ட செயலாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஏழுமலை வாலாஜாஅரசுதலைமை மருத்துவமனை மருத்துவர்கள் வெங்கடேஸ்வரன் கிரிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக பொருளாளர் ஷபுதின் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் திமுக நகர மன்ற உறுப்பினர் இர்பான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் விசாரம் இளநிலை பொறியாளர் சாதிக் அவர்களுக்கு சிறந்த இளநிலை பொறியாளர் என்ற விருது வழங்கப்பட்டது.


இதில் கலந்துகொண்ட அனைத்து சமூக ஆர்வலருக்கும் பொதுமக்களும்  ராணிப்பேட்டை மாவட்டம் சட்ட உரிமை கழகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad