பாலாற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகளை அகற்றியதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 6 January 2024

பாலாற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகளை அகற்றியதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே அதிமுக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ், எம், சுகுமார் தலைமை தாங்கி இருந்தார், மேலும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையை ஆற்றினார்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது, மேல்விஷாரம் பகுதி அருகே பாலாற்றின் கரையோரம் இருந்த  சாதிக் பாஷா நகர் எம்ஜிஆர் நகர் கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டிருந்த 526 குடியிருப்பு பகுதிகளை கடந்த 2022 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீர் பிடிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது.


இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள் என்பதாலும் அவர்களுக்கு மாற்று குடியிருப்பதற்கான இடம் வசதி இல்லாததால் வசிப்பதற்கு வழி இன்றி பரிதாப நிலையில் தவிர்த்து வருவதாக தெரிவித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக அப்பகுதி மக்களின் சிரமத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.


இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதாக அமைச்சர் ஏ,வா வேலு தெரிவித்ததாக கேட்ட கேள்விக்கு கிராம நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகள் எனவும் மாநில நெடுஞ்சாலைகள் மூன்று ஆண்டுகள் என சாலைகளில் ஆயுட்காலம்  குறிப்பிடப்பட்டு இருப்பதை தற்போது துறை அமைச்சராக இருப்பவர் கவனத்தில் கொண்டு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக தெரிவிப்பதாக தெரிவித்தார்.


சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக அரசு திமுக என தமிழக முதல்வர் தெரிவிப்பதாக கேட்ட கேள்விக்கு : திமுக கட்சி சிறுபான்மை மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி இருப்பதாகவும் திமுக அரசு சிறுபான்மை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் திமுக அரசு பாதுகாப்பான அரசு இல்லை என சிறுபான்மை மக்கள் கருதுவதாக தெரிவித்தார்.


நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக கேட்ட கேள்விக்கு : தேர்தலின் போது அதிமுகவின் களப்பணியை பார்க்கத்தான் போகிறார்கள் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெறுவது உறுதியெனவும் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியானது அதிமுகவின் வெற்றிக்கோட்டையாக அமையும் என தெரிவித்தார்.



அதிமுக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது என கேட்ட கேள்விக்கு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் ஒன்றை கோடி தொண்டர்கள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் இரண்டு கோடிக்கு மேல் தொண்டர்களை சேர்த்து வலுவான நிலையில் அதிமுக இருப்பதாக தெரிவித்தார்.


எடப்பாடி கே பழனிச்சாமி தப்பி தவறி தலைவர்  ஆகிவிட்டார் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாக கேட்ட கேள்விக்கு : ஓ பன்னீர்செல்வம் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை என பதிலளித்தார்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad