சுகாதாரமற்ற நிலையில் வாலாஜா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், புலம்பும் அங்கன்வாடி ஊழியர்கள். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 January 2024

சுகாதாரமற்ற நிலையில் வாலாஜா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், புலம்பும் அங்கன்வாடி ஊழியர்கள்.


ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜா சோளிங்கர் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது  இந்த அலுவலக மேற்பார்வையில் 104 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன   தற்போது இந்த  திட்ட அலுவலகம்  சுகாதாரமற்ற நிலையில் உள்ளது, அலுவலகம் முன்பாக  செடி, கொடிகள், புல், பூண்டுகள், கல், பாட்டில் ஓடுகள் நிறைந்து காணப்படுகின்றது.

மேலும்  அவ்வப்போது திட்ட  அலுவலர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்பதற்கு போதிய இடவசதி இல்லை, கழிவறை தரை உடைந்துள்ளது,  தண்ணீர் இல்லை, தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுபான பிரியர்கள்  குடித்துவிட்டு, மது பாட்டில்களை அங்கே வீசி செல்கின்றனர், ஆடு மாடுகள் சுற்றித்திரிந்து சாணமிடுகின்றன, அலுவலகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால்  பாதுகாப்பு இல்லை என அங்கன்வாடி ஊழியர்கள் புலம்புகின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை சரி செய்து பராமரிக்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad