நெமிலி பேரூராட்சியில் வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் - தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 7 January 2024

நெமிலி பேரூராட்சியில் வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் - தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.


நெமிலி பேரூராட்சியில்  பெரியார் சிலை அருகே வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் என்ற தலைப்பின் அடிப்படையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.


இந்தியாவில் ஒன்பது  வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிஜேபி ஆட்சியில் பல்வேறு மாநிலங்களில் பட்டியலின மக்கள் மீது அதிகரிக்கும் கொலைவெறித் தாக்குதல்கள்! ஆர்.எஸ்.எஸ்.ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடைசெய்ய வலியுறுத்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மக்கள் அதிகாரம்  ஆகிய அமைப்புகள் இணைந்து வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம் என்ற தலைப்பின் அடிப்படையில் நெமிலி பேரூராட்சியயில் பெரியார் சிலை அருகில்  தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர்  வே.மோகன் தலைமை தாங்கினார், திராவிட விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர் திலீபன், வி.சி.க. நகர துணைச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் அதிகாரம் சென்னை மண்டலம் இணைச்செயலாளர் புவண் வி.சி.கமுன்னாள் மாவட்ட செயலாளர்  கௌதமன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர் மஸ்தான், அருந்ததியர் மக்கள் பேரவை தலைவர் குருவை குமார்,  ஊடக செம்மல், சமூக நீதி ஊடக மையம் தலைவர் பவா.சமத்துவன், மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் சே.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் கௌதமன் பேசுகையில் மத்தியில் பிஜேபி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது  பிஜேபிக்கு  இந்த  அதிகாரம் மக்கள் கொடுத்த அதிகாரமா? மெஷின் கொடுத்து அதிகாரமா? என்ற குழப்பம் இதுவரையில் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சி பொறுத்தவரை மக்களாட்சி சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது, ஜனநாயகமே இல்லை, விவசாயம், கல்வி,  சுகாதாரம் சுரண்டப்பட்டு தனிமனித முதலாளியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.


சகோதரத்துவம், சமத்துவம், நல்லொழுக்கம், இறையாண்மை ஆகியவற்றை ஒழித்து சாதி கட்டமைப்பை தக்கவைக்க ஆர்எஸ்எஸ் அஜண்டா செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார், ஐ.மு.மு.கழக மாவட்ட செயலாளர்  மஸ்தான் பேசுகையில், தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறை  டச்சுக்காரர்கள் கொண்டு வந்தது  இந்த தேர்தல் முறையில் ஜமீந்தார்கள் மிட்டா, மிராசுகள் மட்டுமே வாக்களித்து வந்தனர் இந்த வாக்கு முறை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  மறைமுக வாக்களிப்பாக  இருந்தது 


தற்போது வாக்களிக்கும் முறை ஆதரவளிக்கும்  வாக்கு முறையாக மாறி இருக்கிறது  உலகத்தில் 210 நாடுகளில் 190 நாட்டுல  விகிதாச்சார வாக்கு முறை பயன்பாட்டில் உள்ளது அதில் இந்தியாவும் ஒரு நாடாக அங்கம் வகிக்கிறது  இந்த விகிதாச்சார வாக்கு முறை இந்தியாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது, என்றால் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், போன்றவர்களை தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


ஆனால் உள்ளாட்சி நிர்வாகத்தில் விகிதாச்சாரம் வாக்கு முறை பயன்படுத்தப்படுவதில்லை உள்ளாட்சித் தேர்தலிலும்  விகிதாச்சர வாக்கு முறையை கொண்டு வருவதற்கு தொடர்ந்து நாம் வலியுறுத்த  வேண்டும் என்றார், பிரதமர்,முதலமைச்சர் சொல்லுகிற டிஜிட்டல் இந்தியாவில் நெமிலி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பிடத்தில்  அடிப்படை வசதி இல்லாமல், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது என்றார் முஸ்லிம்களும் தலித் இன மக்களும் தன் நிலையை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்த நாட்டின் பிரதமராக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.


மக்கள் அதிகாரம் சென்னை மண்டல செயலாளர் புவண் பேசுகையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பிஜேபி ஆட்சியில் இந்தியாவில் வட மாநிலங்களில் தலித் இன மக்கள் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள், தமிழகத்திலும் இதே நிலை  தொடர்கிறது, தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை,விலைவாசி ஏற்றம், விவசாயிகள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்   அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது, எனவே நமது நாட்டை காப்பாற்ற பிஜேபி வேண்டாம் ஜனநாயகத்தை காப்பாற்ற  மாற்று ஆட்சியை  கொண்டு வர நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பல்வேறு கருத்துகளை பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad