நெமிலி அருகே வேளியநல்லூர் ஊராட்சியில் ரூ. 54,94.429 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 February 2024

நெமிலி அருகே வேளியநல்லூர் ஊராட்சியில் ரூ. 54,94.429 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா!


ராணிப்பேட்டை மாவட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிக்காட்டுதலில், வேளியநல்லூர் ஊராட்சி டபிள்யூ. பி. எம் ரோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 43.10.360 மற்றும் பிள்ளைப்பாக்கம் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 6.51.560 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், வேளியநல்லூர் ஊராட்சி 15வது நிதிக்குழு மானியத்தில் வேளியநல்லூர் ஊராட்சியில் ரூ.3.19.309 சிமெண்ட் சாலை அமைத்தல், வேளியநல்லூர் ஊராட்சி 15வது நிதிக்குழு மானியம் கீழ் குடிநீர் குழாய் பைப்லைன் விஸ்தரிப்பு ரூ. 2.13000 ஆகிய மதிப்பிட்டிற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா வேளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர். அமுதா அருள் அவர்கள் தலைமையில் வேளியநல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர். ரம்யா ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுகவின் செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள்,  நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மேற்கு ஒன்றிய துணை செயலாளர். சம்பத், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி. தேவேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர். சண்முகம், கிளை செயலாளர்கள். கிருஷ்ணன், தேவராஜ், வார்டு உறுப்பினர்கள். உண்ணாமலை, சுஜாதா, கட்சாலை, ஊராட்சி செயலாளர். வெங்கடேசன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad