ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா நெமிலி நகர செயலாளர். செல்வம் தலைமையில் நடைபெற்றது. நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் வரவேற்பு வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி எம்.எல்.ஏ கலந்துகொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மாணவர் அணி செயலாளர். முருகன், நெமிலி ஒன்றிய கவுன்சிலர். சங்கர், கழக நிர்வாகிகள். பரந்தாமன், சுகுமார், மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment