நெமிலி அருகே ரெட்டிவலம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

நெமிலி அருகே ரெட்டிவலம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம்‌ நெமிலி ஊராட்சி ஒன்றியம் ரெட்டிவலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர்.உமாதேவி ரமேஷ் தலைமையில், ஒன்றிய குழு உறுப்பினர். கிருஷ்ணவேணி வெங்கடேசன் முன்னிலையில் நடைப்பெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் கலந்துக்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், நீலகண்டன், நித்தியானந்தம், பாலசந்தர், விக்னேஷ் மற்றும் பொது மக்கள், கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துக்கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad