ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம், அகவலம் மற்றும் ரெட்டிவலம் ஆகிய கிராமங்களில் மக்கள் விரோத விடியா திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே. வி.ஆர். அருணாபதி தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர். குடியாத்தம் அமர்நாதன் கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் பரப்புரை செய்தார். இதில் வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். அன்னியப்பன், வேட்டாங்குளம் கிளை கழக செயலாளர். வேலு, தயாளன், காளன், அகவலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். குப்புசாமி, மாவட்ட பிரதிநிதி. நடராஜன் மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment