ராணிப்பேட்டையில் விசிக கட்சியினர் மின்னணு வாக்கு முறையை ஒழித்து, வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

ராணிப்பேட்டையில் விசிக கட்சியினர் மின்னணு வாக்கு முறையை ஒழித்து, வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஈவிஎம் மின்னணு வாக்கு முறை ஒழித்து மீண்டும் வாக்கு சீட்டு முறையை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ராணிப்பேட்டை மாவட்ட   செயலாளர் சீ.மா.ரமேஷ் கர்ணா தலைமை தாங்கினார்   மேற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்    இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர்  சங்கத்தமிழன், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் இரா.ஆதிமொழி மற்றும் இந்திய கூட்டணி கட்சி சேர்ந்த பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.


இந்நிகழ்ச்சியை கௌதமன் கோபு  ஒருங்கிணைத்தனர். இதில்  மாநில செய்தி தொடர்பாளர் பாவாணன்,  தொகுதி செயலாளர் ராஜா, செய்தி தொடர்பாளர் சசி குமார், இந்திய கூட்டணி பொறுப்பாளர்கள்  ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும்   பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad