ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் பேரூர் கழக அவை தலைவர் பழனியாண்டி, வட்ட கழக செயலாளர் சூரியன், அண்ணா நகர் கிளை செயலாளர் பலராமன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் துணை செயலாளர் தயாளன், முன்னாள் நகர செயலாளர் முனுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment