நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து சு. ரவி எம். எல். ஏ தலைமையில் அதிமுக- வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 February 2024

நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து சு. ரவி எம். எல். ஏ தலைமையில் அதிமுக- வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று நெமிலி பேருந்து நிலையத்தில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன். ஆண்டோமதிவாணன் மற்றும் அவரது மனைவி. மார்லினா உள்ளிட்டோர் அவர்கள் வீட்டில் வேலை செய்த 18 வயது உடைய ரேகா என்கிற இளம் பெண்ணை பல்வேறு சித்திரவதைகள் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. 

இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ -வின் மகன் மற்றும் மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ -வுமான சு. ரவி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது, திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து புழக்கடை வழியாக ஆட்சியை பிடித்தது. இந்த ஆட்சியில் பெண்கள், மாணவிகள் மற்றும் பெண் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை. போலீசார் திமுகவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். 


திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் இன பெண்ணை வன்கொடுமை செய்தது மிகவும் கண்டிக்கதக்கது. மத்திய அரசு தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கிய நிதியை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி திமுக அரசு சமூக நீதி என நாடகமாடி வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், பிடிஓ அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. 


திமுக-வுக்கு ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் தினந்தோறும் வருத்தப்படுகின்றனர். வருகின்ற லோக்சபா தேர்தலில் திமுக -வுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க தயாராக உள்ளனர் என்று ஆவேசமாக பேசினார். இதில் சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத், ஒன்றிய செயலாளர்கள். விஜயன், அருணாபதி,பிரகாஷ், பழனி, அரக்கோணம் நகர செயலாளர். பாண்டுரங்கன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர். மான்மல், மாவட்ட துணை செயலாளர். தயாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர். பாலு, மாவட்ட பாசறை செயலாளர். அன்பரசு, தகவல் தொழில்நுட்ப அணி. புருஷோத்தமன், நெமிலி நகர செயலாளர். செல்வம், பொருளாளர். நவநீதகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி. முருகன், டவுன் பஞ். கவுன்சிலர். சங்கர், அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர்கள். பாபு, சரவணன், ஓச்சலம் நிர்வாகி. மணிகண்டன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad