ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகா, வார்டு உறுப்பினர். கந்தசாமி, கல்வியாளர். ராஜமாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவி. சிவரஞ்சனி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல், இடம்பெற்றன. கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது உண்மையிலேயே நரிக்குறவர் ஒருவர் பங்கு பெற்று மாணவர்களுடன் சேர்ந்து ஆடியது பார்ப்பவர் நெஞ்சத்தை பூரிக்கச் செய்தது மாணவர்களும் மகிழ்ச்சி பெற்றனர். இவ்வாறாக பள்ளியின் ஆண்டு விழா இனிதாக நடந்து முடிந்தது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment